ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் தியேட்டர்களில் படம் வெளிவந்த 100 நாட்களுக்குள் புதிய படங்களை டிவியில் ஒளிபரப்புவதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. காலப்போக்கில் அந்த எதிர்ப்பு காணாமல் போனது. தங்களது படங்களின் சாட்டிலைட் உரிமை டிவிக்களில் நல்ல விலைக்கு விற்காதா என தயாரிப்பாளர்கள் காத்திருந்த காலம் வந்தது.
கடந்த வருடம் கொரோனா முதல் அலை காரணமாக ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியானது. அதற்கு ஒரு படி மேலே, புதிய படங்களை நேரடியாக டிவிக்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். அந்த விதத்தில் கடந்த வருட தீபாவளிக்கு பிரசன்னா, ஷாம், யோகி பாபு நடித்த 'நாங்க ரொம்ப பிஸி' படத்தை டிவியில் நேரடியாக வெளியிட்டார்கள்.
அதற்குப் பிறகு இந்த வருடத்தில், “புலிக்குத்தி பாண்டி, ஏலே, மண்டேலா, சர்பத், வணக்கம்டா மாப்ளே” ஆகிய படங்களை தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிவிக்களில் வெளியிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்ததாக 'வெள்ளை யானை' படம் வரும் ஜுலை 11ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒரு முன்னணி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மிகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டிவியில் நேரடியாக வெளியாகும் 8வது படம் இது.
கொரோனா அலை காரணமாகத்தான் கடந்த வருடம் முதல் டிவியில் படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்தார்கள். ஆனால், முதன் முதலாக 2008ம் ஆண்டு சேரன், நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து தேசிய விருது பெற்ற 'ஆடும் கூத்து' படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பானது.