பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கமலுக்கு மேக்கப் அலர்ஜி, படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்கள் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. அதையடுத்து ஒரு வருடமாக பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது லைகா நிறுவனம்.
இதனால் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடிக்க தொடங்க, ஷங்கரோ தெலுங்கு, ஹிந்தியில் புதிய படங்களை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கினார். இதனால் இந்தியன்-2வை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க செல்லக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடி தடை போட்டது லைகா நிறுவனம்.
அதையடுத்து, லைகா நிறுவனமும், டைரக்டர் ஷங்கரும் இந்த பிரச்சினை பேசி சுமூக முடிவுக்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்காரணமாக, இன்று இந்தியன்-2 வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இருதரப்பினருக்குமிடையே பேசி தீர்த்து தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை நீதிபதி சதீஷ்குமார் நியமித்துள்ளார். இவர் லைகா நிறுவனம்-டைரக்டர் ஷங்கருக்கிடையே மத்தியஸ்தம் பேசி அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், இந்தியன்-2 விவகாரம் குறித்த இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.