டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ்த் திரையுலகத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக அனுபவமுள்ளவர் கமல்ஹாசன். திறமையானவர், பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களே தடுமாறிக் கொண்டிருக்க புதிதாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' விவகாரம் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. 'சபாஷ் நாயுடு' படம் இனிமேலும் நகராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் வேலைகள் எப்போதே ஆரம்பமாகியது, அதன்பின் என்ன ஆனதென்றே தெரியவில்லை. அவற்றோடு 'விக்ரம்' படத்திற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.
அத்தனை படங்களும், எப்போது முடிவுக்கு வரும் என இழுத்துக் கொண்டிருக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார் என்ற செய்தி பேச்சோடு போகுமா நடக்குமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'விக்ரம்' படத்தின் கதை, திரைக்கதையில் கமல்ஹாசன் தலையிட்டு சில பல மாற்றங்களை சொன்னதால் தான் அப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிறது என்பது கூடுதல் தகவல்.




