போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சாமி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இதையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவத்து குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைதான வழிப்பறி கொள்ளையர்கள் போல காண்பிக்கப்பட்டிருந்தனர். அந்த போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது.