இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத், அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். அஜித் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1-ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் மக்கள் அல்லல்படும் இந்த நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதனால் வலிமை படத்தின் அப்டேட் வெளியிடுமாறு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது படம் குறித்த எந்தவொரு அப்டேட்-ம் வெளியாகாத நிலையிலும் வலிமை வேறு வகைகளில் சாதனை படைக்கத் துவங்கியுள்ளது. வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம். அப்படி வலிமை படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். பாகுபலி சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் வலிமை இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் 17 லட்சம் எண்ணிக்கையுடன் அவென்ஜர்ஸ் எண்டு கேம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.