பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' |
வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இதை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனியின் காளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இயக்குனர் கிருத்திகா தனது பிறந்த நாளை காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.