இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை மந்திரா பேடி. சினிமா, டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
தமிழில் சிம்பு நடித்த “மன்மதன் படத்திலும், சாஹோ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கௌஷல் என்பவரை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மந்திரா. அவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த வருடம் தான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று(ஜூன் 30) அதிகாலை ராஜ் கௌஷல் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். அன்று தான் தன் மனைவி, குழந்தைகளுடன் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அடுத்த சில தினங்களுக்குள் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் கௌஷல் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். “அந்தோணி கோன் ஹை, ஷாதி கா லாடூ, பியார் மெயின் கபி கபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கணவரின் உடலை அவரே சுமந்து சென்றதோடு, இறுதிச்சடங்கின் போது வைக்கப்படும் கொள்ளி என சொல்லப்படும் அந்த சட்டியை கையில் ஏந்தி கண் கலங்கியபடி சென்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் நெஞ்சையும் உருக்கியது.