''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்தியன்-2 படத்தை இயக்கி முடிக்காமல் புதிய படவேலைகளை டைரக்டர் ஷங்கர் தொடங்கியதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மேலும் தெலுங்கு சினிமா கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் விஷால் நடித்த சண்டக்கோழி-2 படத்தை அடுத்து தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி.
இந்த நேரத்தில் தங்களிடம் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு ஒரு படத்தை இயக்கி தந்த பிறகுதான் வேறு படத்தை லிங்குசாமி இயக்க வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா சேம்பரில் புகார் அளித்துள்ளார்.
அதாவது, கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை எடுத்தபோது லிங்குசாமிக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது அவருக்கு பண உதவி செய்தாராம் ஞானவேல்ராஜா. ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் அவரிடத்தில் வாங்கிய பணத்தை லிங்குசாமியினால் திருப்பி தர முடியவில்லையாம்.
அதனால் தன்னிடம் வாங்கிய பணத்திற்கு தனது நிறுவனத்திற்கு ஒருபடம் இயக்கித் தருமாறு அப்போது கூறியிருக்கிறார் ஞானவேல்ராஜா. ஆனபோதிலும் லிங்குசாமி தெலுங்கு படவேலைகளை தொடங்கியதால் தான் அவர் மீது தற்போது புகார் அளித்துள்ளாராம் ஞானவேல்ராஜா. அதேசமயம் தெலுங்கு பிலிம் சேம்பரில் ஞானவேல்ராஜா உறுப்பினராக இல்லை என்பதால், அவர் கொடுத்த புகாரின் பேரில் லிங்குசாமிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.