என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து தமிழில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பைப் பெற்ற படம் 'அசுரன்'. இப்படத்தை தெலுங்கில் 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள்.
தமிழில் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தாணு, தெலுங்கில் சுரேஷ் பாபுவுடன் இணைந்து தயாரித்தார். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் வெங்கடேஷ், பிரியாமணி மற்றும் பலர் நடித்தனர். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து கடந்த மே மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தை வெளியிட முடியவில்லை. இதனிடையே, இப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிடும் உரிமை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று தான் தயாரிப்பாளர் சுரேஷ் காத்திருந்தாராம். ஆனால், மூன்றாவது அலையும் வரும் என சொல்லப்பட்டு வருவதால் தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகத்தால் ஓடிடியில் வெளியிட அவர் முடிவு செய்ததாகச் சொல்கிறார்கள்.
அவரது தயாரிப்பில், வெங்கடேஷ் நடித்துள்ள மற்றொரு படமான 'த்ரிஷ்யம் 2' படத்தையும் ஓடிடியில் தான் நேரடியாக வெளியிட உள்ளார்கள். வெங்கடேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து நேரடி ஓடிடி வெளியீடு தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மற்றொரு தயாரிப்பான அவரது மகன் ராணா டகுபட்டி, சாய் பல்லவி நடித்துள்ள 'விராட பர்வம்' படத்தையும் அவர் நேரடி ஓடிடி வெளியீட்டிற்கு கொடுத்துவிட்டார் என்றும் தகவல். அதற்காக மூன்று படங்களையும் சேர்த்து பெரும் தொகையை வாங்கி லாபமடைந்துவிட்டார் என்கிறார்கள்.