''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடித்து கடைசியாக 2019ம் ஆண்டு 'கடாரம் கொண்டான்' படம் வெளிவந்தது. கமல்ஹாசன் தயாரித்த அப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா', கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத தனது 60வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
'கோப்ரா' படத்தில் சில வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடிக்கிறார் என்பது அப்படத்தின் டீசரிலேயே தெரிந்தது. ஜனவரி மாதம் வெளியான டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இதுவரை 18 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்படம்தான் விக்ரம் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இப்படத்திற்கு முன்பாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முதலில் முடித்துவிட விக்ரம் எண்ணுகிறாராம். இப்படத்தில் அவருடன் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படம் அதிக விமர்சனத்துக்குள்ளானது. அப்படியிருக்கையில் விக்ரம் இப்படி ஒரு ரிஸ்க்கை தேவையின்றி எடுக்கிறாரோ என கோலிவுட்டிலும் பேசிக் கொள்கிறார்களாம்.
'கோப்ரா' படம் அடுத்து வருவது தான் விக்ரமிற்கும் சிறப்பானதாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், எஞ்சியிருக்கும் படப்பிடிப்பை முடித்து, கிராபிக்ஸ் காட்சிகளையும் முடிக்க இன்னும் காலதாமதம் ஆகுமாம். எனவேதான் விக்ரம் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கிறார் என்கிறார்கள்.