பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் |
பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது காதல் பின்னணியில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசி வருகின்றன. அப்படி ஒரு ஓடிடி நிறுவனம் 500 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்தை கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரோ அதை நிராகரித்து விட்டார்
இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது தான் தனது முடிவு என்றும் அதுவரை நாங்கள் பொறுமையாக காத்திருக்க தயார் என்றும் கூறிவிட்டாராம் படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் பட்ஜெட் ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று அதிகமாகி விட்டது என்றாலும்கூட,. ஓடிடி டீலிங்கை மறு யோசனைக்கு இடமின்றி நிராகரித்து உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.