Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்புக்கு முழுக்கு போடும் கார்த்திகா

22 ஜூன், 2021 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Karthika-to-quit-cinema

கோ படத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்தால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை கார்த்திகா. பிரபல சீனியர் நடிகை ராதாவின் மகளான இவருக்கு, பின் வந்த நாட்களில் தனது தாயின் புகழ் எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. அன்னக்கொடி, புறம்போக்கு ஆகிய படங்களும் இவரை ஏமாற்றின. அருண் விஜய்யுடன் சில வருடங்களுக்கு முன் நடித்த வா டீல் படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது.

தவிர இந்தியில் அர்னாப் என்கிற சீரியலிலும் நடித்தார் கார்த்திகா. கடந்த இரண்டு வருடங்களாகவே பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத கார்த்திகா, இனியும் சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்க விரும்பவில்லையாம். அதனால் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தான் தற்போது பொறுப்பு வகித்து வரும் யுடிஎஸ் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பணியையே தொடர முடிவு செய்துள்ளாராம் கார்த்திகா. மேலும் இனி சினிமா பக்கமே திரும்புவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளாராம் கார்த்திகா,.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
'லிகர்' ஓடிடி ரிலீசா : கிண்டலடித்த விஜய் தேவரகொண்டா'லிகர்' ஓடிடி ரிலீசா : கிண்டலடித்த ... ரூ.500 கோடி டீலை நிராகரித்த ராதே ஷ்யாம் தயாரிப்பாளர் ரூ.500 கோடி டீலை நிராகரித்த ராதே ஷ்யாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
26 ஜூன், 2021 - 17:47 Report Abuse
Loganathaiyyan ஹோட்டல் நிறுவனத்தின் இயக்குனர் ஒரு நடிகையா???கேள்விப்படாத விஷயமாக இருக்கின்றதே
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
25 ஜூன், 2021 - 16:15 Report Abuse
Anbu கார்த்திகா, உங்க ஹோட்டலுக்கு சாப்பிட வந்தா வயிறார பரிமாறுவீங்களா ????
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 ஜூன், 2021 - 04:39 Report Abuse
meenakshisundaram இல்லேம்மா இன்னும் 'கொஞ்சம்' பொறுங்க .பாரதிராஜா -எங்கள் சிங்க தமிழன் ஒரு அவார்டு படம் எடுப்பார் .அதிலே நடிச்சுட்டு அப்புறம் ஒய்வு எடுங்க .இப்ப போனீங்கன்னா திரை உலகம் தாங்காது .-என் இனி தமிழ்மக்கள் தங்க மாட்டார்கள் ,தூங்க மாட்டார்கள்
Rate this:
24 ஜூன், 2021 - 05:53 Report Abuse
கும்பகோணத்து குசும்பன் இதனால் தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாது கேரள, ஆந்திர, கன்னட, பாலிவுட் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அம்மணியிடம் இளமை 'துள்ளல்' கொஞ்சம் கூட இல்லை என்பது உண்மை. நம்ம ஆளுங்க துள்ளலைத்தான் எதிர்பார்க்கிறாங்க.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23 ஜூன், 2021 - 18:38 Report Abuse
J.V. Iyer நல்ல முடிவு. திரை உலகம் பிழைத்தது.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in