ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ராதா, 1980 -90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவரது மகள் கார்த்திகா, 2011ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கிய கோ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களிலும் நடித்தார். அதோடு மலையாள, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் அவரது காதலர் ரோகித்துடன் கார்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் வரும் 19ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் கார்த்திகா.
அதன் உடன், ‛‛உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் துவங்கி விட்டது,'' என குறிப்பிட்டுள்ளார்.