நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'லிகர்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தை ஓடிடியில் வெளியிட ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும், அது சம்பந்தமாக தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாகவும் மீம் ஒன்றுடன் செய்தி வெளியாகி இருந்தது.
அதைப் பகிர்ந்து, “ரொம்ப குறைவு, தியேட்டர்களில் இதைவிட அதிகம் செய்வேன்,” கிண்டலாக பதிலளித்திருந்தார்.
தெலுங்கில் தற்போது தயாராகி வரும் பல படங்கள் பான் - இந்தியா படங்களாக தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியிடும் வகையில் தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் 'லிகர்' படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியக் கூட இல்லை, அதற்குள் ஓடிடி வெளியீடு, 200 கோடி, தயாரிப்பாளர் பேச்சு வார்த்தை என யாரோ செய்தி வெளியிட்டுள்ளார்கள்.