இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு நேற்று பீஸ்ட் என்ற தலைப்பை அறிவித்தார்கள். சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி வருவதற்கு முன்பு தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு கொடுத்து வந்தது. ஜிஎஸ்டி வரி அமலான பின்பு அந்த வரி விலக்கு கொடுக்கும் முறை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து பலரும் தமிழல்லாது வேற்று மொழித் தலைப்புகளை வைக்க ஆரம்பித்தார்கள்.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த “மாஸ்டர், பிகில், சர்க்கார், மெர்சல் எதுவுமே தமிழ் வார்த்தைகள் அல்ல. இப்போது அவரதுஅடுத்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைத்திருக்கிறார். பலர் பேசும் போது ஆங்கில வார்த்தை கலப்புடன் பேசினாலும் இந்த பீஸ்ட் வார்த்தை அதிகப் புழக்கத்திலும் இல்லை.
தமிழை வளர்க்கிறோம், தமிழப் பாதுகாப்போம் என்று சொல்பவர்கள் தான் இப்படி அதிகமான தமிழ்ப் புறக்கணிப்பையும் செய்கிறார்கள் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் வருத்தப்படுகிறார்கள்.
தமிழில் பெயர் வைத்தால்தான் வரி விலக்கு என்பதை எல்லாம் மாநில அரசு மீண்டும் கொண்டு வரக் கூடாது என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். தமிழில் படங்களைத் தயாரிப்பவர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் அவர்களாகவே பொறுப்புடன் நடந்து கொண்டு தமிழில் மட்டுமே பெயர்களை வைக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
என சினிமாவில் பாடினால் மட்டும் போதுமா விஜய் ?, உங்கள் படங்களுக்குத் தொடர்ச்சியாக வேற்று மொழிகளில் தலைப்பு வைக்கிறீர்களே ?.
விடுதலை சிறுத்தை கட்சி எதிர்ப்பு
இதனிடையே விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, பீஸ்ட் என்ற தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நடிகர் விஜய் படங்கள் தமிழில்தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் ஆங்கில பெயர்களையே தொடர்ந்து வைப்பதின் மர்மம் என்னவோ? பிகில், மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?'' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.