இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருவார். சமீபகாலமாக சாக்ஷி அகர்வால் வெளியிடும் படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் அவை சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறன்.
சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட படங்களில் அவரது இடது காலில் டாட்டூ இடம்பெற்றிருந்தது. பிரெஞ்சு மொழியில் ஏதோ எழுதி இருக்க ரசிகர்களுக்கு அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. சாக்ஷியிடம் கேட்டதற்கு “La vie est belle' அதாவது, பிரெஞ்சு மொழியில் 'லைப் இஸ் பியூட்டிபுல்' என்று பொருள்” என்று கூறியுள்ளார்.