அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் சிலம்பரசன் உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாநாடு'.
இந்தப் படத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், மாநாடு படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அதில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிம்பு, தான் குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலம் ஆவதாக கூறினார். மேலும் பிரேம்ஜி போன்றோர் உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக பேசினார்.
மாநாடு படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்புகளின் போது சிலம்பரசன் அதிக எடையோடு இருந்தார். அதன் பின்னர் கொரோனா முதல் அலையின் போது அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியானதால் படத்தில் சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டிய இருந்ததாக இயக்குனர் வெங்கட்பிரபு கூறினார். நடிகர் சிம்புவின் புதிய பரிமாணத்தை இந்த திரைப்படத்தில் தான் கொண்டு வந்துள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளனர்.
மாநாடு திரைப்படத்தில் தாங்கள் கடினமாக பணியாற்றியதற்கு மக்களும் ரசிகர்களும் நல்ல மரியாதை கொடுப்பார்கள் என்ற சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மாநாடு திரைப்படம் வேற லெவலில் வந்திருப்பதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.