டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை | எம்புரான் ரிலீஸில் புதிய சிக்கல் : லைகாவை ஒதுக்கிவிட்டு ரிலீஸ் செய்ய திட்டம்? | ஜவான் படத்தை மறுத்தது ஏன்? : மலையாள இளம் நடிகர் விளக்கம் | லோகேஷ் 40 ரஜினி 50 அமீர்கான் 60 : கூலி படக்குழு உற்சாக கொண்டாட்டம் | குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் |
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இதில் கதாநாயகிகளாக அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதில் சாக்ஷி அகர்வால் பேசும் போது, பஹிரா படத்தின் இயக்குனர் ஆதிக் என்னிடம் கதை சொல்லும் போது, இந்த படத்தில் 7 கதாநாயகிகள் என்று சொன்னார். நான் எப்படி இயக்குவார் என்று பயந்தேன். ஆனால், சிறப்பாக இயக்கி இருக்கிறார். படத்தின் நாயகன், பிரபு தேவா சாருக்கு மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. 2 வருடமாக இப்படத்திற்கு கடின உழைப்பை படக்குழுவினர் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.