ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் கூட்டு ஆலோசனை கூட்டம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : திரைப்படத்துறையினரின் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். சினிமா படப்பிடிப்புகளுக்கு பல்வேறு துறைகளிடம் எங்கு அனுமதி பெறுவது என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய இணையதளம் அமைச்சகத்தின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய இணையதளம் தயாரிப்பாளர்கள், இந்தியாவில் எந்த பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கு வகை செய்வதோடு, தொழில் புரிவதை எளிமையாக்குவதை உறுதி செய்யும். அனிமேஷன் தொழில்நுட்பம் வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை பயில உலக தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவரிடம் திரைப்பட சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.