சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தொழிலபதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்தும் வருகிறார். கடந்த சில மாதங்களாக காஜல் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காஜலும் கூட விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் நடிப்பதாக ஏற்கனவே ஒப்பந்தம் ஆயிருந்த படங்களில் இருந்து விலகி வருகிறார். The Ghost என்ற படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக வேறொரு நடிகை படத்தில் இணைந்துள்ளார். அந்த படத்தில் காஜல் சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். பின்னர் படக்குழுவினருக்கும் காஜலுக்கும் இடையே பரஸ்பர முடிவுடன் அவர் படத்திலிருந்து விலகியுள்ளார்.
ஜேஎம் சரவணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ரவுடி பேபி என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தி வெளியானது. இந்தப் படத்தில் நடிகை ஹன்சிகா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சோனியா அகர்வால், ராய் லட்சுமி, ராம்கி, சத்யராஜ், ஜான் கோக்கன் மற்றும் மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் முதலில் காஜல் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.