‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.
சித்தார்தின் டுவீட் சமந்தாவை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் சில காலம் காதலில் இருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தா பின்னர் தான் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
சித்தார்த் வெளியிட்ட அந்தப் பதிவிற்கு பல கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். "ஒவ்வொரு நாளும் நான் என் மனதில் தோன்றுவதை டுவீட் செய்கிறேன், தெருநாய்களைப் பற்றி நான் டுவீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல" என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மேலும் "தனது டுவீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் இழுத்து பெரியதாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். "என் வாழ்க்கையில் விரும்பாதவர்களை விட நான் என் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். எனவே ஊடகங்களின் வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.