கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
தமிழ் சினிமா உலகில் சில இரண்டாம் பாகப் படங்கள் சில பல சிக்கல்களால் சிக்கிக் கொண்டிருக்கிறது என நேற்று தான் செய்தி வெளியிட்டோம். அதில் ஒரு படத்திற்கான விடிவுகாலம் என்னவென்பதை அதன் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க லண்டனில் ஆரம்பமான படம் துப்பறிவாளன் 2. அங்கு ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் படத்தின் இயக்குனர் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். பெரும் சர்ச்சையான அந்த விவகாரம் அப்படியே முடங்கிப் போய் படமும் முடங்கி இருந்தது.
சமீபத்திய பேட்டியில் இப்படத்தை 2022ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் விஷால். முன்னர் சொன்னபடி படத்தை அவரே இயக்கப் போகிறாராம், இசையும் இளையராஜாதான் எனக் கூறியிருக்கிறார்.
லண்டனில் காலையில் படப்பிடிப்பை லேட்டாக ஆரம்பித்து ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே மிஷ்கின் எடுத்து தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சை அடங்கிப் போயிருந்த இந்த விவகாரம் விஷாலின் பேட்டியால் மீண்டும் சர்ச்சைகளை வரவக்கும் என்றே தெரிகிறது.