பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

காதலர்களாக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி, முன்பெல்லாம் தாங்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட ரொமான்ட்டிக் போட்டோக்களை தான் சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்து வருவர். குறிப்பாக விக்னேஷ் சிவன், நயன்தாராவை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் என் தங்கமே என உருகுவார். ஆனால் இப்போது இவர்கள் அடிக்கடி தனி விமானத்தில் பறப்பது தொடர்பான போட்டோக்கள் தான் அதிகமாக வெளியாகின்றன.
சென்னைக்கும், கொச்சிக்கும் அடிக்கடி சென்று வரும் இந்த காதல் ஜோடி கொரோனா காலம் என்பதால் தனி விமானத்தில் பறக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே இதுபோன்று இரு முறை தனி விமானத்தில் இவர்கள் சென்று வந்த நிலையில் இப்போது மீண்டும் தனி விமானத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு பறந்துள்ளனர்.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் பாட்டு என்ற படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் இவர் கொச்சினுக்கு தனது காதலன் விக்னேஷ் சிவனையும் அழைத்து சென்றுள்ளார். தனி விமானத்தில் இவர் வந்திறக்கும் போடக்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.




