'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
தெய்வமகள் சீரியலில் பிரபலமான வாணி போஜன், சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு சீரியல்களில் நடித்தே சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர்களை வைத்திருந்தார். அதையடுத்து சினிமாவுக்கு வந்து ஓ மை கடவுளே படம் மூலம் பிரபலமாகி விட்ட வாணி போஜன் தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாணி போஜனிடத்தில், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர என்ன காரணம்? என்று ஒரு ரசிகர் கேட்டபோது, சின்னத்திரையில் எத்தனை சீரியல்களில் நடித்தாலும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கேரக்டர்களாகத்தான் கிடைக்கும். ஆனால் சினிமாவில் மாறுபட்ட கதைகளில் தயாராவதால் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க முடியும். அதனால் தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் வெற்றி பெறுவதற்கு கவர்ச்சி, திறமை இரண்டில் எது முக்கியம்? என்று இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, கவர்ச்சியும் தேவை தான். என்றாலும் திறமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பதில் கொடுத்துள்ளார் வாணி போஜன்.