இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நம்பர் 1 நடிகையாக இருந்தவர் அசின். 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் அறிமுகமாகி 'கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம், காவலன்' உள்ளிட்ட பத்து படங்களில் நடித்தவர்.
ஹிந்திக்குச் சென்று அங்கு முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சில படங்களில் நடித்த பின் மைக்ரோமேக்ஸ் மொபைல் போன் கம்பெனியின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவைக் காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் அரின் என்ற மகள் இருக்கிறார்.
எப்போதோ ஒரு முறை தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அசின் நேற்று தன்னுடைய மூன்று வயது மகள் அரின் கதக் நடனம் கற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மூன்று வயது குழந்தையின் வாரஇறுதி கதக் பயிற்சி,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அசினும் மூன்று வயதாக இருக்கும் போதே பரதநாட்டியம் கற்க ஆரம்பித்தவராம். அது போலவே தன்னுடைய மகளையும் மூன்று வயதிலேயே நடனம் கற்றுக் கொள்ள வைத்துள்ளார்.