பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை தழுவி அசுரன் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். தனுஷ் நாயகனாக நடித்த அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு தனுசுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
அதையடுத்து தற்போது சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் விஜய் சேதுபதி கைதியாக நடிக்க கவுதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இயக்குகிறார் வெற்றிமாறன்.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை தழுவி உருவாகிறது. ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்த கதைக்களத்தில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக நாவல் மற்றும் சிறுகதைகளை தழுவி படங்கள் இயக்கி வரும் வெற்றிமாறன், இதன்பிறகு படமாக்குவதற்கும் சில கதாசிரியர்களின் கதையை தேர்வு செய்து வைத்துள்ளாராம்.




