'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
'இந்தியன் 2' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை 'மாஸ்டர்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு படத்தின் அறிமுக டீசருடன் வெளியானது.
இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே, இப்படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இரட்டையளர்களான அன்பறிவ் இப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர்களாக பணியாற்றி உள்ளது தான் அந்த அப்டேட்.
கேஜிஎப் 1 மற்றும் 2, கைதி, சண்டக்கோழி 2, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் பணியாற்றியுள்ளார்கள்.
'இந்தியன் 2' படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராத சூழலில் 'விக்ரம்' படத்தின் அப்டேம் வந்தது குறித்து கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் 'இந்தியன் 2' படம் மீண்டும் உடனே ஆரம்பமாகுதோ இல்லையோ 'விக்ரம்' ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது.