ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர் | புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத் | அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! |
கொரோனா முதலாவது அலை கடந்த வருடம் பரவிய போது நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், உதயா, இயக்குனர்கள் ஹரி, அஜய் ஞானமுத்து, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட சிலர் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். ஆனால், அவர்களைத் தொடர்ந்து வேறு எந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் யாரும் சம்பளக் குறைப்பு பற்றி அறிவிக்கவில்லை.
கடந்த ஒரு வருட காலமாக திரையுலகம் கொரோனாவுக்கு முந்தைய பழைய நிலையை அடைய போராடி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையால் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால், பெரும் நிதிச்சுமைக்குத் தயாரிப்பாளர்கள் ஆளாகியுள்ளனர்.
தியேட்டர்களை மீண்டும் திறக்கும் வரை அவர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற காத்திருக்க வேண்டும். கடந்த வருடம் சில நடிகர்கள் அறிவித்த சம்பளக் குறைப்பைப் போலவே, அடுத்து வெளியாக உள்ள பல படங்களின் நடிகர்களும் அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தயாரிப்பாளர்களிடம் உள்ளது.
அப்படி குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் குறைத்துக் கொண்டால் தான் தற்போது ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை தயாரிப்பாளர்கள் சமாளிக்க முடியும். செயல்பாட்டில் இருக்கும் தயாரிப்பாளர் சங்கங்கள் கடந்த வருடத்திலிருந்தே அந்த கோரிக்கையை வைத்து வருகின்றன. ஆனால், நடிகர்கள், நடிகைகள் தரப்பிலிருந்து அதற்கான அறிவிப்புகள் வரவில்லை. இப்போதாவது அவர்கள் குறைத்துக் கொண்டால்தான் ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும் அது நன்மை பயக்கும் என்கிறார்கள்.