மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி |

தமிழ்த் திரையுலகில் சில வெற்றிகரமான படங்களைக் கொடுத்த இயக்குனர் எஸ்ஜே சூர்யா, தற்போது கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்ர நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்புக்கெனவும் தனி ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நன்றாகவே எதிரொலித்தது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்த 'இறைவி' படம் வெளிவந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.
அப்படத்தை நினைவு கூர்ந்து படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், 'இறைவி 5 வருடங்கள், என் மனதுக்கும், பலரது மனதுக்கும் எப்போதும் நெருக்கமான ஒரு படம். சீன் ஆர்டரின் முதல் வடிவ கடைசி பக்கம் இதோ” என படத்திற்காக எழுதிய அந்த கடைசி பக்கத்தையும் டுவீட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள எஸ்ஜே சூர்யா, “இப்படம் நமது சினிமா உலகத்தில் ஒரு மைல் கல்லான படம், நன்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இப்படத்தில் என்னையும் தேர்வு செய்து ஒரு பார்ட்டாக இருக்க வைத்தீர்கள். அந்த ரயில்வே ஸ்டேஷன் காட்சியை நீங்கள் படமாக்கிய அந்த நாளை இன்னும் மறக்க முடியாது,” என படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் 'குஷி' படம் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அப்பட கிளைமாக்ஸ் பற்றி அவர் சொன்னது வைரலானது. இப்போது 'இறைவி' படத்தின் கிளைமாக்ஸ் பற்றியும் அவர் சொல்லியிருக்கிறார். இரண்டு படங்களிலும் கிளைமாக்ஸ் காட்சி ரயில்வே ஸ்டேஷன் சம்பந்தப்பட்டுள்ளது என்பது ஓர் ஒற்றுமை.