'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு'.. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா(1989), சேதுராம ஐயர் சிபிஐ(2004), நேரறியான் சிபிஐ(2005) என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 32 வருடங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நான்கு பாகங்களையும் இயக்கியவர் இயக்குனர் மது.. தமிழில் 'மௌனம் சம்மதம்' என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதியவர் பிரபல சீனியர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. இந்தப்படத்தின் 5ஆம் பாகம் துவங்குவது கிட்டத்தட்ட 15 வருடங்களாகவே தள்ளிப்போய்க் கொண்டிருந்தது.
இந்த நிலையில் வரும் ஆக-17ஆம் தேதி கேரளாவின் சிறப்பு வாய்ந்த சிங்கம் மாதத்தின் முதல் நாளன்று இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக ஊள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் கூட, இந்தப்படத்தின் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி மம்முட்டியை நேரில் சந்தித்து இந்த படத்தை துவங்குவது பற்றி பேசிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.