'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்? | 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா? | பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம் | அடுத்தடுத்த வெற்றிகள்… 'பரிமளா அண்ட் கோ'வுக்கும் கிடைக்குமா ? | நயன்தாரா சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த ராஷ்மிகா | தென் கொரியா சுற்றுலா தூதுவராக பிரியங்கா மோகன் நியமனம் | அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த 'மின்னல் முரளி' நடிகை | 'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி | 'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு |

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பணமாக நிதி உதவி செய்வதுடன் ஒரு சிலர் மருத்துவ உதவிகளையும் நேரடியாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் மோகன்லால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி திட்டத்தை தற்போது துவங்கியுள்ளார்.
மோகன்லால் தனது பெற்றோர் பெயரில் விஸ்வசாந்தி என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கேரளாவில் பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். இதன்மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரண வசதிகள் கூடுதலாக செய்து தரப்பட்டுள்ளன.
மோகன்லால் கூறும்போது, “கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 200 படுக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய 10 ஐசியூ படுக்கைகள் மற்றும் போர்ட்டபிள் எக்ஸ்-ரே மிசின் என மூன்று அடுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது” என கூறியுள்ளார்..




