'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
பிரபுதேவா இயக்கத்தில், சல்மான்கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்து ரம்ஜானை முன்னிட்டு 'பணம் செலுத்தி பார்க்கும் முறை'யில் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியான படம் 'ராதே'. இப்படத்திற்கு முதல் நாளில் பெரும் வரவேற்பு இருந்ததாக பாலிவுட்டில் பில்டப் கொடுத்தார்கள். ஆனால், படம் வெளியான அன்றே பைரசி தளங்களில் படம் வெளியாகிவிட்டது. ரசிகர்களை எச்சரிக்கும் விதமாகவும் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் சல்மான்கான்.
படத்தைப் பார்க்க 249 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்பதால் பலரும் படத்தை பைரசி தளங்களில் ஓசியில் பார்த்துவிட்டனர். மேலும், படமும் நன்றாக இல்லாத காரணத்தால் பலரும் பணம் கொடுத்து படத்தைப் பார்க்கத் தயங்கினர்.
பொதுவாக சல்மான் கான் படம் தியேட்டர்களில் வெளியானால் முதல் நாளிலேயே 100 கோடி வரை வசூலிக்கும். ஆனால், இந்தப் படம் டிஜிட்டல் தளங்களில் அவ்வளவு வசூலைக் கொடுக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.
ஒட்டு மொத்தமாக இப்படம் 80 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைக் கொடுக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை வாங்கிய ஜீ நிறுவனத்திற்கு எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பது பெரும் வருத்தம்தான்.
இந்த நஷ்டம் மூலம் டிஜிட்டல் தளங்களில் இப்படி படத்தை வெளியிடும் முறையில் ரிஸ்க் எடுத்து யாரும் வர மாட்டார்கள் என்று சொல்கிறார்கள்.