அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிக்கும் சமந்தா | விலை உயர்ந்த காரை வாங்கிய ஊர்வசி ரவுட்டேலா | விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் டீசர் வெளியானது | சம்பள பாகுபாடு : சமந்தா முன்னெடுத்த செயல் | டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் |
சித்தா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரதீர சூரன். விரைவில் இந்த படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். முக்கியமான வேடங்களில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும், மலையாள காமெடி மற்றும் குணசித்ர நடிகரான சுராஜ் சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்துள்ளனர். சுராஜ் வெஞ்சாரமூடு தமிழில் நடிக்கும் முதல் படம் இதுதான். இவர் ஏற்கனவே ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு படத்திலேயே நடிப்பதாக இருந்து சில காரணங்கள் அது நடக்காமல் போனது. இந்த நிலையில் சுராஜ் தமிழ் வசனங்களை அழகாக பேசியுள்ளார் என்று இயக்குனர் அருண்குமார் சமீபத்தில் தனது ஆச்சரியத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அருண்குமார் கூறும்போது, “நான் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவின் நடிப்புக்கு ரசிகன். இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும் என விரும்பி தயாரிப்பாளரிடம் கூறினேன். தயாரிப்பாளரும் அவரும் நண்பர்கள் தான். ஆனாலும் நான் சுராஜிடம் கதை சொல்ல சென்ற போது இந்த படத்தில் நான் நடிக்கிறேன்.. ஆனால் தயாரிப்பாளருக்காக அல்ல உங்களுக்காக உங்களுடைய சித்தா, பண்ணையாரும் பத்மினியும் படங்களை நான் பார்த்திருக்கிறேன் அதற்காகத்தான். இந்த படத்தின் கதையை சொல்லுங்கள் என்று அவர் கூறியதும் அவர் என்னை எவ்வளவு கவனித்திருக்கிறார் என ஆச்சரியப்பட்டேன்.
அதன்பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்த போது முதல் நாளே மிக நீளமான வசனங்களை பேச வேண்டி இருந்தது. ஆனால் எந்த தடுமாற்றமும் இன்றி அழகான தமிழ் உச்சரிப்புடன் அவர் அந்த வசனங்களை பேசினார். நீங்கள் படம் பார்க்கும்போது கவனித்துப் பார்த்தால் உச்சரிப்புக்கும் உதடுகளின் அசைவிற்கும் எந்த வித மாற்றமும் தெரியாது. அதற்கு காரணம் அவர் படத்தின் வசனங்களை முன்கூட்டியே என்னிடம் வாங்கிக் கொண்டு தனக்கென ஒரு மொழிபெயர்ப்பு உதவியாளரை வைத்துக் கொண்டு வசனங்களை பேச பக்காவாக தயாராகித்தான் படப்பிடிப்பிற்கே வந்தார். நிச்சயமாக இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்பது உறுதி” என கூறியுள்ளார் அருண்குமார்.