2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஒரு காலத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்த படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியிருக்கின்றன. அடுத்து வந்த இளம் நடிகைகளுடன் தெலுங்கில் தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழ்ப் பக்கமே திரும்பி வந்தார்.
2018ல் விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்த '96' படம் அவருக்கு அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தது- அதன்பின் நான்கைந்து படங்களில் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் வெளியீட்டுச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன. அவற்றில் 'பரமபத விளையாட்டு' படம் மட்டுமே ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
அவர் பெரிதும் எதிர்பார்க்கும் 'ராங்கி' படம் கூட ஓடிடி தளத்தில் தான் வெளியாகும் என்று சொல்கிறார்கள். இதனிடையே, தெலுங்கில் மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க த்ரிஷா சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், கொரோனா தளர்வுகளுக்குப் பிறகே தன்னுடைய அடுத்த படங்களைப் பற்றிஅவர் முடிவு செய்யப் போகிறாராம்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் தான் த்ரிஷா கைவசம் உள்ளது.