பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' |
ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரும், ஐதராபாத் ஐபிஎல் அணியின் வீரருமான டேவிட் வார்னர், அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி தெலுங்குத் திரைப்பட நடன வீடியோக்களைப் பதிவிடுவார்.
அவர் மட்டுமல்லாது அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோரும் அந்த வீடியோக்களில் நடிப்பார்கள். அவரது வீடியோக்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதுநாள் வரையில் தெலுங்குப் படப் பாடல்களை மட்டுமே பயன்படுத்தி வந்த டேவிட் வார்னர், தற்போது தமிழ்ப் பாடல்களையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
தனுஷ், சாய் பல்லவியின் அதிரடியான நடனம் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடலை 'பேஸ்ஆப்' மூலம் தனுஷ் முகத்திற்குப் பதிலாக அவரது முகத்தைப் பொருத்தி வீடியோவை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோவிற்கு இதுவரையிலும் 28 லட்சத்திற்கம் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது.
“பலரது வேண்டுகோளை ஏற்று மீண்டும்... இதற்குப் பெயர் வையுங்கள்,” எனக் கூறி தனுஷ், சாய் பல்லவி ஆகியோரை டேக் செய்துள்ளார். இம்மாதிரியான வீடியோக்களால் தான் இந்தியாவில் தனக்காக பல லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ளார் டேவிட் வார்னர்.