'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
யு டியூப் பிரபலமான பின் அதில் வெளியாகும் படங்களின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை படைக்கும் புதுப்புது சாதனைகள் படங்களுக்கு மிகப் பெரிய இலவச விளம்பரமாக அமைகின்றன.
தமிழ் சினிமா பாடல்களில் முதன் முதலாக அனிருத் இசையமைத்து தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யு டியூபில் முதன் முதலில் 100 மில்லியன் பார்வைகள் சாதனையைப் படைத்தது. அதற்குப் பிறகுதான் யு டியுபை இந்தியத் திரையுலகினர் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தப் பாடலுக்குப் பிறகு பல பாடல்கள் 100 மில்லியன் சாதனையைப் படைத்தன.
ஆனால், 'மாரி 2' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ் எழுதி, தீ--யுடன் இணைந்து பாடிய 'ரவுடி பேபி' பாடல் வெறும் 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகள் என்ற புதிய சாதைனையை படைத்தது. அதற்குப் பிறகு பல சூப்பர் ஹிட் பாடல்கள் வந்தாலும் அந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத், ஜோனிதா காந்தி பாடிய 'அரபிக்குத்து' பாடல் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
'ரவுடி பேபி' பாடல் யு டியூபில் வெளியாகி கடந்த மூன்று வருடங்களில் 1300 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியத் திரையுலகத்தின் முதல் அதிகப் பார்வை பாடல் என்ற பெருமையுடன் உள்ளது. இந்த சாதனையை வேறு எந்தப் பாடலாவது முறியடிக்க முடியுமா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும்.