டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பதிவு செய்ய தவறுவதில்லை.. குறிப்பாக ஐபிஎல் சீசன் சமயத்தில் எல்லாம் ரஜினி பற்றிய விஷயங்களை ஏதோ ஒருவகையில் ஞாபகப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிடுவார்.. காலா வெளியான சமயத்தில் அந்தப்படத்தில் ரஜினி பேசிய கியாரே செட்டிங்கா என்கிற வசனத்தை பேசி அதிரவிட்டார் தோனி.
இதோ இப்போது ஐபிஎல் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் பாட்ஷா ரஜினிகாந்த்தின் ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் காட்சியளிக்கிறார் தோனி.. ஒரு பேருந்தை ஸ்டார்ட் செய்வது போலவும், ரஜினியை போல கூலிங்கிளாஸை சுழற்றுவதுமாகவும் ஸ்டைல் காட்டியுள்ளார் தோனி. அதேசமயம் அவரது ஹேர்ஸ்டைலும் மீசையும் சிவாஜி பட ரஜினியை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள் பலரும்.




