‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வலிமை'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன். அவர் இசையமைத்த மூன்று பாடல்கள் மற்றும் விசில் தீம் மியுசிக், தி இன்டன்ஸ் ஆப் பயர் தீம் ஆகியவை யு டியூபில் வெளியிடப்பட்டன. படத்தின் டீசருக்கும் யுவன்தான் இசையமைத்திருந்தார். ஆனால், வலிமை டிரைலர் வெளியான போது அதற்கு இசையமைத்தது யார் என்ற கேள்வி எழுந்தது.
படத்திற்குப் பின்னணி இசையை யுவன் அமைக்கவில்லை. இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் அமைத்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், படம் வெளியான பிறகு வரை படத்தின் பின்னணி இசையமைப்பாளர் யார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிடவில்லை. எந்த விளம்பரங்களிலும் ஜிப்ரான் பெயர் இடம் பெறவில்லை. படத்தின் டைட்டிலில் கூட 'நன்றி ஜிப்ரான்' என்று மட்டுமே போட்டிருந்தனர். இரு தினங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்த ஒரு வீடியோ பேட்டியில் கூட அதற்குக் குழப்பமான பதில் ஒன்றையே தந்திருந்தார்.
இந்நிலையில் யுவன் ஷங்கர்ராஜா, ''வலிமை' படத்தின் பின்னணி இசை சிறப்பு ஜிப்ரான்” என அவருக்கு வாழ்த்து சொல்லி டுவீட் போட்டிருந்தார். மேலும், ”படத்தின் பாடல்களுக்கும், என்னுடைய ஒரிஜனல் விசில் தீம் மியூசிக்கிற்கும் அன்பையும் பாராட்டுக்களையும் தந்த அஜித்குமார் ரசிகர்கள், என்னுடைய ரசிகர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்,” என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் பின்னணி இசை யார் என்ற சர்ச்சைக்கு யுவனே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அவருடைய டுவிட்டர் பதிவில் யுவனின் ரசிகர்கள் பலர் படத்தில் யுவனின் பின்னணி இசை இடம் பெறாதது குறித்து தங்களது கவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். யுவனின் வாழ்த்துக்கு ஜிப்ரான் இன்னும் எந்த நன்றியும் தெரிவிக்கவில்லை, படக்குழுவினரும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர்.
யுவன்ஷங்கர் ராஜா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது 'வலிமை' விவகாரம் குறித்தும், விஜய்யை சில வாரங்களுக்கு முன்பு சந்தித்தது குறித்தும், அவர் என்ன பேசப் போகிறார் என்பதைக் கேட்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.