இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? |
அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்க வினோத் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வலிமை'. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் சுமாரான வசூலைக் கூடத் தரவில்லை.
அஜித் நடித்த 'வலிமை' படம் வந்தால்தான் தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரவழைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் தியேட்டர்காரர்கள் இருந்தனர். பொங்கலுக்கே வெளிவர வேண்டிய படம் கொரோனா பாதிப்பால் கடந்த வாரம் பிப்ரவரி 24ம் தேதி வெளியானது.
படம் பற்றி இரு வேறான விமர்சனங்கள் இருந்தாலும் அனைத்து விமர்சனங்களையும் மீறி தியேட்டர்களுக்கு எதிர்பார்க்கப்பட்டபடியே மக்கள் வந்தனர். முதல் நாளிலேயே இப்படம் தமிழகத்தில் 30 கோடிக்கும் மேல் வசூலித்ததாகத் தகவல் வெளியானது. இப்போது மூன்றே நாட்களில் 100 கோடி வசூலை அள்ளியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 100 கோடி வசூல் என்பதை அவர் ரீடுவீட் செய்துள்ளார். நேற்று நான்காவது நாளான ஞாயிறன்றும் பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாகவே இருந்தன என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். படம் நிச்சயம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்பதுதான் திரையுலகினரின் தகவலாகவும் இருக்கிறது. இதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தயாரிப்பாளர் போனிக பூர் வெளியிடுவார் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.