மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை உடல் நலக் கோளாறு காரணமாக கடந்த 9ம் தேதி காலமானார். மறைந்த தன் தாயின் நினைவுகளை பகிரிந்து, வெங்கட்பிரபு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என் தந்தையும், எனது தம்பி பிரேம்ஜியும், நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம். முன்னொருபோதும் பார்த்திராத இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஒரு பேரிழப்பில் திக்கித் திணறிக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில் எங்களை அரவணைத்துத் தேற்றித் தோள்கொடுத்து நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக என் ஆத்மார்த்தமான நன்றிகளையும், சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகவும் எங்கள் மீது நீங்கள் அனைவரும் பொழிந்து வரும் பிரதிபலனில்லா அன்பில் நெகிழ்ந்துபோய் இருக்கிறோம்.
இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.