ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எனக்கு ரொம்ப பிடித்த கதாநாயகி, சினேகா, என்று டைரக்டர் பாலுமகேந்திரா கூறியுள்ளார். சினேகா, கிஷோர் நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி, டாக்டர் வி.ராம்தாஸ் தயாரித்துள்ள படம், ஹரிதாஸ். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு டைரக்டர் பாலுமகேந்திரா பேசுகையில், இந்த படம், தந்தை-மகனுக்கு இடையேயான கதை என்று கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் தந்தை, மகனுக்கு ஹீரோவாக இருக்கிறான். அப்புறம் தந்தைக்கு மகன் ஹீரோவாக இருக்கிறான். தந்தை-மகன் உறவு, பவித்ரமானது.
என் மூத்த மகன் பாலா. இன்னொரு மகன் வெற்றி மாறன். சீனுராமசாமி, ராம் ஆகியோரும் என் பிள்ளைகள்தான். இவர்கள் எல்லோருமே உலக தரத்தில் படங்களை இயக்குகிறார்கள். இதைவிட ஒரு தகப்பனுக்கு என்ன பெருமை வேண்டும்? எனக்கு ரொம்ப பிடித்த நடிகை, சினேகா. ஏன் என்று என்னால் விளக்கம் சொல்ல முடியாது. கிஷோர் மிக சிறந்த நடிகர். இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரத்னவேல், என்றார். விழாவில் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், பாலா, சசி, கண்ணன், நடிகர்கள் விக்ரம், பிரசன்னா, கிஷோர், விஜய் ஆதிராஜ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, ஒளிப்பதிவாளர் ரத்னவேல், பாடல் ஆசிரியர் பா.விஜய் ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர் டாக்டர் வி.ராமதாஸ் வரவேற்று பேசினார். டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன் நன்றி கூறினார்.