நாட்டில் கொரோனா தொற்றால் நிலவி வரும் பிரச்சினைகளில் தங்களால் முடிந்த சில சிறு சிறு உதவிகளையும் சினிமா பிரபலங்கள் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் ஒரு வீடியோவையும், தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், சுகாசினி மணிரத்னம், மாதவன், துல்கர் சல்மான், விக்ரம் பிரபு, அதர்வா, அரவிந்த்சாமி, ராதிகா சரத்குமார், நாசர் ஆகியோர் கொரோனா பாதுகாப்பு முறை பற்றியும், தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு வீடியோவை இரண்டு தினங்களுக்கு முன்பே வெளியிட்டுள்ளனர்.
'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழில் ராம்சரண், தெலுங்கில் ஆலியா பட், கன்னடத்தில் ஜுனியர் என்டிஆர்,, ஹிந்தியில் அஜய் தேவகன், மலையாளத்தில் இயக்குனர் ராஜமவுலி ஆகியோரும் முகக்கவசம் அணிவதன் அவசியத்தையும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பேசியுள்ளனர்.
அவர்கள் சொல்வது போல நாம் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தியும், தடுப்பூசி அணிந்தும் கொரோனா வருவதைத் தடுப்போம்.