மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
தமிழ்நாட்டில் எந்த ஒரு முதல்வர் பதவியேற்றாலும், அவர்களைத் தேடிச் சென்று வாழ்த்தி, பாராட்டி மகிழ்வது தமிழ்த் திரையுலகில் உள்ள முக்கிய சங்களின் கடமையாக இருக்கும். புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக ஏற்கெனவே திரையுலகத்தைச் சேர்ந்த சில சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஏறக்குறைய அனைத்து நடிகர்களும் முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். சிலர் நேரடியாகவே சென்று பார்த்துள்ளார்கள்.
முதல்வரிடம் நன்மதிப்பைப் பெறுவதற்காக வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் சமயங்களில் முதல்வரைச் சந்தித்து நிவாரண நிதி வழங்குவதை சில நடிகர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். தற்போது கொரோனா பேரிடர் நாட்டையே உலுக்கி வருகிறது. அதனால், முதல்வரைச் சந்தித்து அவரது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும் திட்டத்தை சீக்கிரமே யாராவது ஆரம்பித்து வைப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு திரையுலகத்தில் உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், விஜய், அஜித் ஆகியோர் இன்னும் எந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை. இன்னும் சில நாட்களில் முதல்வரை சந்திக்க பல சினிமா பிரபலங்கள் முயற்சிப்பார்கள் என்றே தெரிகிறது.