10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். அவர் நடித்த 'கர்ணன்' படம் கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. வெளியான மறுநாளிலேயே தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றார்கள். அதன்பின் இரண்டு வாரங்களில் தியேட்டர்களை முழுவதுமாகவும் மூடிவிட்டார்கள்.அதனால் 'கர்ணன்' படத்தை பெரும்பாலானவர்கள் இன்னும் பார்க்கவில்லை.
இருந்தாலும், அவர்களுக்காகவே படத்தை ஒரு மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார்கள். அடுத்த வாரம் மே 14ம் தேதி 'கர்ணன்' படம் ஓடிடியில் வெளியாகிறது என செய்திகள் வந்துள்ளன. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காதவர்கள் ஒரு மாதத்தில் ஓடிடியில் படத்தைப் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை ஜுன் 18ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார்கள். ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்களை ஓடிடி தளத்தில் பார்க்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு கிடைக்கப் போகிறது.
தனுஷின் அடுத்த படம் எப்படியும் அடுத்த ஆண்டுதான் வெளியாகும். தற்போது தனுஷ் சில புதிய படங்களில் நடித்து வந்தாலும, கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் படம்தான் முதலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.