பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் 'தடக்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடித்த 'கோஸ்ட் சீரிஸ், குன்ஜன் சக்சேனா' ஆகியவை ஓடிடி தளங்களில்தான் வெளியானது. கடந்த மூன்று வருடங்களில் அவரால் ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை.
அவரைத் தேடி தெலுங்கு, தமிழ்ப் பட வாய்ப்புகள் சென்றாலும் அதை கண்டு கொண்டதில்லை. இந்நிலையில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள புதிய படத்தில் ஜான்வியை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தன் அம்மா தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளதால் பிரம்மாண்டமான தெலுங்குப் படங்களில் தற்போதைக்கு நடிக்கலாம் என ஜான்வி முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பும் ஜான்வி தெலுங்கில் நடிக்க வருவார் என்று சொல்லப்பட்டாலும் அவை செய்தியாக மட்டுமே கடந்து போயின. இந்த முறையாவது ஜான்வி தெலுங்குப் பக்கம் சாய்வாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.