அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்தபடியாக விஜய் நடிக்கயிருக்கும் 66வது படத்தை, தெலுங்கில் மகேஷ்பாபு, பிரபாஸ் என பிரபலங்களை இயக்கியுள்ள வம்சி பைடிபள்ளி தமிழ், தெலுங்கில் இயக்குவதாகவும், தில்ராஜூ அப்படத்தை தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அப்படத்திற்கான ஒன்லைன் கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே செய்து விட்ட வம்சி பைடிபள்ளி, அடுத்தகட்டமாக ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி விட்டதாகவும், 2022 ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.