ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க போகும் தனுஷ் | புஷ்பா 2 படத்தில் பஹத் பாசிலுக்கு கூடுதல் முக்கியத்துவம் | கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யும் மாற்றம் | நடிகர் சாருஹாசனுக்கு அறுவை சிகிச்சை : சுஹாசினி தகவல் | மகளின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | அமரன் படத்தை பாராட்டிய ரஜினி | மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு விலகிய ஸ்மிருதி | நான் உங்கள் ராஜியாக தொடர்வேன் - ஷாலினி விளக்கம். | இந்திய சினிமாவுக்கு 2024 சிறப்பான தீபாவளியா? | இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜிவி பிரகாஷ்குமார் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை தான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் மொத்தமாக நிகழும் அவலமும் தொடர்கிறது. அதனால் தான் கடந்த வருடம் கொரோனா தாக்கத்தின்போது மருத்துவ உதவிகளை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமாற்றம் செய்ய, பொருளாதார ரீதியாக உதவ கவனம் செலுத்திய பாலிவுட் நடிகர் சோனு சூட் கூட, இந்தமுறை ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளி மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்..
சமீபத்தில் சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆயிரக்கணக்கான சிலிண்டர்களை அவர் ஆர்டர் செய்திருந்தார் என்கிற தகவல் கூட வெளியானது. இந்தநிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள தனது அத்தை ஒருவருக்கு, அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த தகவல் சோனு சூட்டின் கவனத்திற்கு சென்றதும், “கவலைப்படாதீர்கள் பாய்.. இன்னும் பத்து நிமிடத்தில் சிலிண்டர் அங்கே சென்றுவிடும்” என தைரியம் கூறி, ஆக்சிஜன் சிலிண்டரை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் சோனு சூட்.
கடந்த வருடம் தனது மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயிக்கு மறுநாளே சொந்தமாக ட்ராக்டர் வாங்கி கொடுத்ததாகட்டும், இதோ இப்போது சுரேஷ் ரெய்னா கேட்ட உதவியை செய்து கொடுத்ததாகட்டும், ஏழை, பணக்காரன் என அனைவருக்குமே பாகுபாடில்லாமல் விரைந்து உதவி வருகிறார் சோனு சூட்.