அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறும் என்று சொல்வார்கள். அதன்படி திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் நேற்றே சில காட்சிகள் மாறிவிட்டன.
தமிழ்த் திரைப்பட உலகத்திற்கும் திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்தான். அவருடைய பேரன்கள் உதயநிதி, அருள்நிதி நடிகர்களாக இருக்கிறார்கள், தயாநிதி தயாரிப்பாளராக இருக்கிறார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்கப் போகிறது என்றதும் நேற்று தமிழ்த் திரையுலகத்தில் உள்ள மூன்று தயாரிப்பாளர் சங்கங்களும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து தெரவித்தன. இனியும் மூன்று சங்கங்கள் தொடருமா அல்லது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சங்கங்கள் தாய் சங்கத்தில் ஐக்கியமாகுமா என்பது போகப் போகத் தெரியும்.
இதனிடையே, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க கடந்த 2019ம் வருடம் ஜுன் மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போதைய தேர்தலில் போட்டியிட்ட விஷால் அணியினருக்கும், ஐசரி கணேஷ் அணியினிருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் கடந்த வருடங்களாக நிற்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இரு தரப்பினரும் பேசி முடிவெடுக்க வேண்டுமென நீதிமன்றம் சொன்னது. ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே உள்ளது. கடந்த அரசும் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை.
நடிகர் சங்கத்திற்காக பல மாடி கட்டிடம் பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் அப்படியே நிற்கிறது. அதை முடித்து வைக்க விஷால் தரப்பினர் ஆர்வமாக உள்ளது. உதயநிதியுடன் நண்பராக இருக்கும் விஷால் இந்த விவகாரத்தை அவரிடம் கொண்டு சென்று சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு எடுப்பார் என நலிந்த நாடகக் கலைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.