வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே அதன்பிறகு தமிழில் படங்கள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, ஹிந்திக்கு சென்று நடித்து முன்னணி நாயகியாகி விட்டார். தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்தில் கமிட்டாகியுள்ளார்.
அடுத்தபடியாக சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் சிவா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. இந்த படத்தில்தான் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம். ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில சூர்யா நடிக்க தயாரானார். ஆனால் அந்த நேரம் பார்த்து ரஜினி படவாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு கிடைத்ததால் சூர்யா படத்தை தள்ளி வைத்து விட்டு ரஜினி படத்தை இயக்க சென்று விட்டார்.
அதோடு சூர்யாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரை ரஜினி படத்தை இயக்க அனுப்பி வைத்தார். இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தை முடித்ததும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் சிவா.