'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கி வெளியாகியுள்ள படம் கர்ணன். தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு கிடைத்தபோதும் பின்னர் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. என்றாலும் படத்தை அது பாதிக்கவில்லை. கொரோனா நேரத்திலும் தொய்வில்லாமல் வசூலித்து வருகிறது கர்ணன்.
அதோடு, இந்த படத்திற்காகவும் தனுசுக்கு இன்னொரு தேசிய விருது கிடக்கும் என்கிற கருத்துக்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனபோதும் இதுபோன்ற மகிழ்ச்சியை தமிழகத்தில் இருந்து கொண்டாடி மகிழ முடியாத வகையில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் தனுஷ்.
இந்த நிலையில், தமிழ்ப்புத்தாண்டான நேற்று கர்ணன் படத்தில் வரும் பொம்மையின் பாதி முகத்தையும், தனது பாதி முகத்தையும் இணைத்து ஒரு போஸ்டரை தனது டுவிட்டரில் வெளியிட்டு, கர்ணன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார் தனுஷ்.